Thursday, 10 September 2026

தொகுப்பு : சிவ-சக்தி

சர்வம் சிவ-சக்தி மயம்


 சிவத்தைச் சவமாக்கி,
சக்தியை மட்டுமே உருவாக்கி;
தாயைப் பொருளாக்கி,
சேயை உருவாக்கி;
பண்பாட்டைப் பயன்பாடாக்கி,
வீட்டை உருவாக்க,
காட்டை வீணாக்கி,
நாட்டை யுத்தகளமாக்கி,
இப்படி எல்லாவற்றையும் வீணாக்கி,
மனித வாழ்க்கையைப் பாழாக்கியதென்ன விநோதமோ!
---------------------------------------------

புறவெளி இருட்டில்,
உள்ஒளி வெளிச்சமாய்,
சிந்தனைத் தெளிய,
அகமுகம் மலர,
புறமுகம் பிரகாசிக்க,
கண்ணொளி பெற்று,
இருப்பதின் தன்மையால் காணப்படுவது
கட + உள் = கடவுள்.
---------------------------------------------

"எல்லோரும் ஒன்றல்ல,
ஆனாலும் ஒன்றுதான்.
“வேற்றுமையில் ஒற்றுமை காண்பது எவ்வாறு?”
“மனத்தால், உடலால் வேறு;
உணர்வால், உயிரால் ஒன்று.”
மனத்தால் (mentally),
உடலால் (physically) வேறு;
உணர்வால் (emotionally),
உயிரால் (consciousness) ஒன்று.
---------------------------------------------
ஆண்டவன் : தந்தை : ராஜன்.
---------------------------------------------

தொகுப்பு : நிலா

 நிலா

வெண்ணிலாவின் குண்டுக் குழிகள்
நம் பெண்டு பிள்ளைகள் கண்டு களிக்க,
நான் அதைத் தொலைநோக்கி கொண்டு விளக்க,
அதை அவர் தாய் தந்தையர் கண்டு வியக்க—
வளர்ந்ததென்ன விஞ்ஞானம்!
இன்ப நிலாவினில் பாட்டி தெரிந்ததென்ன?
வடை சுட்ட கதை சொன்னதென்ன?
பின்பு ஆம்ஸ்ட்ராங் களம் இறங்கியதென்ன?
மனிதன் விழித்தெழுந்ததென்ன!